Thursday, 31 December 2015
Saturday, 5 December 2015
கெடுதல் செய்யக்கூடிய பெயர் எண்கள் எவை?
26,29,35,38,44 ஆகிய எண்களைக்கொண்ட பெயர்கள் வாழ்வில் விபத்துக்களையும் தொல்லைகளையும் இடையூறுகளையும் உண்டாக்கும்.
26ம் எண்-விபத்துகளை உண்டாக்கும்
29ம் எண் - வாக்கால் துன்பம் கொடுக்கும்.
35ம் எண் - அனைத்தும் தோல்வி
38ம் எண்- வாழ்க்கை தோல்வி மரணம்
44ம் எண்- தோல்வி,தடங்கல்,விபத்து
தங்கம் பெருக என்ன செய்ய வேண்டும்?
திருநின்றவூரில் உள்ள ஈசனை மாதம் ஒருமுறையாவது வணங்கி வந்தால் செல்வம் பெருகும்.தனதான்யம் பெருகும்.தங்கம் பெருகும்.
Saturday, 28 November 2015
2016 monthly calendars daily calendars
2016 Monthly and daily calendars available.
Many design calendars and table calendars are available.
ஆன்மீக காலண்டர்,
இயற்கை காட்சி காலண்டர்,
முகமதியர் காலண்டர்,
கிறிஸ்தவர் காலண்டர்,
சினிமா காலண்டர்
தனிநபர் காலண்டர்,
மற்றும் பல வாகையான காலண்டர்கள் எங்களிடம் கிடைக்கும்.
Friday, 27 November 2015
வாஸ்து ரகசியங்கள் -பாகம்2
வாஸ்துவின் உள்ளார்ந்த ரகசியங்கள்
ஈசான்ய மூலை ,சனி மூலை என வழங்கப்படும் வடகிழக்கு மூலையானது நம் வீட்டின் தலை பகுதி போன்றது. இப் பகுதியை வரவேற்பறையாக அமைத்தால் மிகுந்த பலன் தரும். சூரிய ஓளி நம் வீட்டினுள் இந்த மூலையில் விழவேண்டும். அதற்கு வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களின் உச்சப் பகுதில் ஜன்னல் வைக்கவேண்டும்.
பணவரவை அதிகரிக்க செய்யும் வழி இதுவே. வீட்டின் ஈசான்யத்தில் உள்கட்டமைப்பிலோ அல்லது அடி மனையிலோ பாரம் வைக்கக் கூடாது .மற்ற இடங்களைக் காட்டிலும் தாழ்வாக இருக்க வேண்டும்.
கிணறு மற்றும் ஆழ்த்துளை கிணறு ஆகியவை ஈசான்ய மூலையில் போடாமல் சற்றுத் தள்ளி வடக்கு மற்றும் கிழக்கு பாகத்தில் போடுவது உத்தமம்.
வாஸ்து ரகசியங்கள் -பாகம் 1
வாஸ்து
ரகசியங்கள்
1.திசைகள் நிலையானதா?
ஆம்,நாம் புவியிர்ப்பு பகுதிக்குள் இருக்கும் வரை திசைகள் நிலையானதே .வடதுருவம் மற்றும் தென்துருவங்களில் மட்டும் திசைகாட்டும் கருவி வேலை செய்யாது.விண்வெளியில் எவ்வித ஈர்ப்பு சக்தியும் இல்லாததால் அங்கும் திசைகளை அறிய முடியாது.
2.வாஸ்துவை அறிந்து கொள்வதால் என்ன பயன் ?
நம்மை நாம் அறிந்து கொள்ளும் வழியே வாஸ்து.நம்முடைய குணா திசையங்கள்,வருமானம் மற்றும் மக்கட் பேறு அனைத்தையும் தீர்மானிக்கும் வீட்டு அமைப்பே வாஸ்து.அதனை அறிந்து கொண்டால் நம்மை நாம் அறிந்து கொள்வது சுலபம்.
3.வாஸ்து பார்க்கும்பொழுது வீட்டுடன் சேர்த்து அடிமனைக்கும் வாஸ்து பார்க்கவேண்டுமா ?
ஆமாம்,அடிமனைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அடிமனையில் உள்ள வாஸ்து குறைப்பாட்டை முதலில் சீர் செய்த பிறகே அந்த மனை வீட்டிற்குள் திருத்தங்களை செய்ய அனுமதிக்கும்.
4.எந்த திசை சிறந்தது ?
திசைகளில் சிறந்தவை என்றும் தாழ்ந்தவை என்றும் பாகுபாடு கிடையாது.ஒவ்வோரு திசைக்கும் ஒவ்வோரு குணநலம் உண்டு.வடக்குத்திசை வருமானத்திற்கு உரியது என்றால், தெற்குத்திசை அதனை கட்டி ஆளுகின்ற திசையாகும்.கிழக்குத்திசை மனநலம் மற்றும் ஆயுட்காலத்திற்கு உரியது என்றால் அவற்றை பேணி காத்து மேன்மைக்கு வழி வகுப்பது மேற்கு திசையாகும்.ஆகவே,எந்த திசையைப் பார்த்த வீடு என்றாலும் உச்ச நீச்சங்களை அறிவது மிகவும் அவசியம்.
5.வாடகை வீட்டிற்கும் வாஸ்து பார்க்க வேண்டுமா ?
வாடகை வீட்டிற்கும் கண்டிப்பாக வாஸ்து பார்க்க வேண்டும்.நாம் அந்த வீட்டில் இருக்கும் வரை அந்த வீட்டின் அமைப்பிற்கு ஏற்றவாறு தான் நம் வாழ்க்கைத் தரமும் இருக்கும்.அந்த வீட்டின் உரிமையாளருக்கும் அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சம்பந்தம் கண்டிப்பாக இருக்கும்.அது நம்மையும் பாதிக்கும்.
6.ஈசான்ய மூலையில் என்னயென்ன அறைகள் வரலாம்?
ஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு மூலையில் வரவேற்பறை ,உணவருந்தும் அறை மற்றும் குழந்தைகளின் படிப்பறை அமைக்கலாம்.தவிர்க்க முடியாத சில இடங்களில் படுக்கையறை அமைக்கலாம்.ஆனால் அப்படி அமைப்பது இரண்டாம் பட்சமே.
7.ஈசான்ய மூலையில் தண்ணீர் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே ...அது ஏன் ?
வாஸ்துவில் நான்கு மூலைகளில் கன்னி மூலை (நிருதி)எனப்படும் தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்க வேண்டும்.அதற்கு அடுத்தபடியாக வாயு மூலையும், அக்னி மூலையும் சற்றே தாழ்திருக்க வேண்டும்,இப்படி அமைக்கும் போது ஈசான்ய மூலை என்கிற வடகிழக்கு பகுதி இயற்கையாகவே மற்ற எல்லா மூலைகளையும் விட பள்ளமாக ஆகிவிடுகிறது. மேலும்,பஞ்ச பூதங்களில் வடக்கு திசை என்பது தண்ணீரைக் குறிக்கும்.எனவே ஈசான்யம் பள்ளமானதால் தண்ணீர் இங்கே இருக்கும் நிலை உண்டானது.இதுவே உண்மையான தாத்பர்யம்.
8.அடுக்குமாடிக் கட்டிடங்களில் உள்ள பிளாட்டுகள் 100 சதவிகிதம் வாஸ்து முறைப்படி கட்டப்பட்டவை என்று விளம்பரம் செய்கிறர்களே ......அது சாத்தியம் தானா ?
இடப்பற்றாகுறையாலும், நிதிப்பற்றாக்குறையாலும் உருவாக்கப்பட்டதே இந்த அடுக்குமாடி கட்டிட தத்துவம். அடிநிலம் அனைத்து பிளாட்டுக்கும் ஒன்றுதான் உங்கள் வீட்டின் மேல்தளம் உங்களின் மாடிவீட்டுக்காரருடைய தரைதளம் ஆகும் .இந்த சூழ்நிலையில் வாஸ்து முறைப்படி எல்லா பிளாட்டுகளுக்கும் அறைகள் அமைக்க முடியாது.பெரும்பாலான இடங்களில் அக்னி மூலையில் சமையலறையும் நைருதியில் மாஸ்டர் பெட்ரூமும் இருந்து விட்டால் வாஸ்து முழுமையாகிவிடும் என்று நம்பப்படுகிறது .இது உண்மையல்ல வீட்டின் ஏதாவதொரு சுவர் பொது சுவராகி விடுகிறது.எனினும் 60% வாஸ்து முறைப்படி பிளாட்டுகள் அமைய வாய்ப்புள்ளது.
9.வாஸ்து குறைபாடுகளுக்க ஏதேனும் பரிகாரங்கள் உண்டா?
ஒரு வீட்டை செங்கற்களாலும் சிமெண்டாலும் கட்டுகிறோம்.அதில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால் அதனை நீக்க செங்கற்களும், சிமெண்ட் டும் கொண்டுதான் செய்யவேண்டும்.சில இயந்திரங்கள், வாஸ்து பொருட்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் தீர்வு உண்டு. எனவே,சரியான வாஸ்து ஆலோசனைப் பெற்று சீர்திருத்தங்களை செய்யவேண்டும். எனவே பரிகாரம் இல்லை.ஆனால் நிச்சயம் தீர்வு உண்டு.
10.வாஸ்து சீர்திருத்தங்கள் செய்ய இயலாத பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் நீங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன ?
ஒரு வீட்டின் அமைப்பு அங்கு வாழும் அன்பர்களின் ஆன்மபலம் ,பணவரவு மற்றும் மக்கட் செல்வங்கள் ஆகியவற்றை தீர்மானிக்கின்றது.சில வகை வீட்டு அமைப்புகள் பணவரவை தடை செய்து கடன் சுமையை அதிகரிக்கச் செய்வதும் உண்டு.அப்படிப்பட்ட இல்லங்களில் நாங்கள் சில எளிய சிர்த்திருத்தங்களைச் சொல்லுவதோடு இதே அமைப்புள்ள கோவில்களையும் பரிந்துரை செய்வதுண்டு.அந்த கோவில்களுக்கு சென்று வருவதால் அந்த வீட்டின் தாக்கத்தில் இருந்து தற்காலிகமாக நிவாரணம் பெற்று வாஸ்துவை உணரமுடியும். .இதுவே அவர்களை நிரந்தர தீர்வை பெற அடிகோலும்.
Tuesday, 3 November 2015
எண்களின் ஆட்சி ' சூரியன் '- தொடர்ச்சி
பிறந்த தேதி - 1,10,19,28
உயிர் எண்- தேதி மாதம் ஆண்டு மூன்றையும் கூட்டி வரும் எண் 1 வந்தாலும் சூரியன் ஆட்சியே.
படிப்பு: அரசியல் கணிதம் ஐ.ஏ.எஸ் ஆகியவற்றில் ஆர்வம் மிக்கவர்கள்.பிரகாசமான படிப்பும் வேலையும் தான் இவர்கள் விருப்பம்.எண் 1-9 என அமைந்தால் ஐபிஎஸ் படிப்பு அமையும்.
தொழில்:போக்குவரத்து பத்திரிகைத்தொழில் ரசாயன இயந்திரங்கள் புத்தகம் வெளியிடு விளையாட்டுக்கருவிகள் போன்றவற்றில் விருத்தி தரும்.
தொடரும்.,...
தொடர்புக்கு karuppasamyp14@gmail.com
உங்கள் சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் தீர்க்கப்படும்.
Friday, 30 October 2015
எண்களின் ஆட்சி- 'சூரியன்'
எண் '1'
சூரியன்.
பொதுப்பலன்:
அனைத்து எண்களுக்கும் தலைமை வகிப்பவர்.நேர்மையானவர், எதிரிகள் இவரைக்கண்டால் அஞ்சுவர்.இவரை எதிர்த்து யாரும் வெற்றி பெற முடியாது.இந்த எண் குடும்ப வாழ்க்கைக்கு இன்பம் துன்பம் இரண்ணுடையும் தரவல்லது.வெளிப்படைத்தன்மை கொண்டது.இது பொதுவான பலன்.
குடும்ப வாழ்க்கை:
பெயர் எண் 1 உள்ளவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைவதில்லை.பெண்ணின் எண் 1 ஆக இருக்கும் பட்சத்தில் பெண்ணிற்கு கட்டுப்பட்டு கனவன் வாழும் சூழல் அமையும்.கனவன் 1ம் மனைவி 3 ம் எண்ணும் அமைந்தால் ஈகோ வால் பிரிந்துவிடுவர்.இருவருக்கிடையே காதல் வர வாய்ப்பில்லை.யார் பெ.ரியவர் என்ற நிலை ஏற்படும்.ஆகவே திருமண வழ்விற்கு பொருத்தமான எண்ணுடையவர்களை திருமணம் செய்ய வேண்டும்.தொடரும்....
உங்கள் சந்தேகங்களை மின்னஞ்சலாக அனுப்புங்கள் விளக்கம் அளிக்கிறோம்
தொடர்புக்கு 7373793336
karuppasamyp14@gmail.com
Thursday, 22 October 2015
NUMBER FOR ALL-1
Number Values for English Alphabets as per Numerology
1= a, i, j, q, y
2= b, k, r
3= c, g, l, s
4= d, m, t
5= e, h, n, x
6= u, v, w
7= o, z
8= f, p
In many cases, numerologists also advice to sum up the birth date,month and year to get a number -
e.g., for 17th July 1968 born person, birth date numerology will be 1+7+0+7+1+9+6+8 = 3
and this number gets associated with the name numerology number Input the whole name as per the record, including any initials, sur names, last names etc.,
தமிழ்
மேலே குறிப்பிட்டுள்ளவற்றில் நமது பெயரில் அடங்கியுள்ள ஆங்கில எழுத்துக்களுக்கு உரிய எண்களை கண்டுபிடித்து மொத்தமாக கூட்டிக்கொள்ள வேண்டும்.பின்பு அவற்றிற்குறிய பலன்களை அறிந்து கொள்ளவேண்டும்.சில எண்களின் கூட்டுத்தொகை நன்மை தரும்.சில எண்களின் கூட்டுத்தொகை தீமை தரும்.தீமைதரும் எண்களை உடைய அன்பர்கள் உடனடியாக பெயர் மாற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெயர் மாற்றும்போது ஜாதகத்தில் பிறந்த நாள் நேரம் நட்சத்திரம் கணக்கிட்டு பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே முழு பலனும் கிட்டும்.
தொடரும்......
தொடர்புக்கு.karuppasamyp14@gmail.com