வாஸ்துவின் உள்ளார்ந்த ரகசியங்கள்
ஈசான்ய மூலை ,சனி மூலை என வழங்கப்படும் வடகிழக்கு மூலையானது நம் வீட்டின் தலை பகுதி போன்றது. இப் பகுதியை வரவேற்பறையாக அமைத்தால் மிகுந்த பலன் தரும். சூரிய ஓளி நம் வீட்டினுள் இந்த மூலையில் விழவேண்டும். அதற்கு வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களின் உச்சப் பகுதில் ஜன்னல் வைக்கவேண்டும்.
பணவரவை அதிகரிக்க செய்யும் வழி இதுவே. வீட்டின் ஈசான்யத்தில் உள்கட்டமைப்பிலோ அல்லது அடி மனையிலோ பாரம் வைக்கக் கூடாது .மற்ற இடங்களைக் காட்டிலும் தாழ்வாக இருக்க வேண்டும்.
கிணறு மற்றும் ஆழ்த்துளை கிணறு ஆகியவை ஈசான்ய மூலையில் போடாமல் சற்றுத் தள்ளி வடக்கு மற்றும் கிழக்கு பாகத்தில் போடுவது உத்தமம்.
No comments:
Post a Comment